Adelaide பகுதியில் உள்ள வீடொன்றின் வளாகத்தில் ute ரக வாகனம் மோதியதில் 18 மாத பெண் குழந்தையொன்று பலியாகியுள்ளது.
இன்று காலை 8 மணியளவிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவ இடத்தில் முதலுதவி அளிக்கப்பட்டு குழந்தை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு உயிரிழந்தது.
சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். விபத்து தொடர்பான விசாரணைகள் தொடர்கின்றன.