கனடாவில் நடைபெறவுள்ள ஜி7 உச்சி மாநாட்டில் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸி பங்கேற்கிறார். கனடா பிரதமரின் அழைப்பை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.
இதற்கமைய அடுத்தவாரம் அவர் கனடா புறப்படவுள்ளார்.
ஜி7 அமைப்பில் அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
இந்த அமைப்பின் உச்சி மாநாடு ஜூன் 15 முதல் 17-ம் திகதி வரை கனடாவின் கனனாஸ்கிஸ் பகுதியில் நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில் பங்கேற்க ஆஸ்திரேலியா, பிரேசில், மெக்ஸிகோ, தென்னாப்பிரிக்கா, உக்ரைன ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கு கனடா அரசு சார்பில் அழைக்கப்பட்டது.
மாநாட்டில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய பிரதமர் உலக தலைவர்களுடன் இரு தரப்பு கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார்.
குறிப்பாக அமெரிக்க ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது இருப்பு மற்றும் அலுமினியம்மீதான வரி விதிப்பு பற்றி அவர் விவாதிக்க உள்ளார்.