இவ்வருட இறுதியில் சீனாவுக்கு பயணம் மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளதாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸி தெரிவித்தார்.
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை சந்திக்கும் நோக்கிலேயே தான் பீஜிங் பறக்கவுள்ளதை பிரதமர் இன்று உறுதிப்படுத்தினார்.
அத்துடன், சீன பயணத்துக்கு முன்னதாக அமெரிக்கா செல்லவுள்ளதாகவும் அவர் கூறினார்.
கனடாவில் நடைபெற்ற ஜி - 7 மாநாட்டின்போது ட்ரம்ப்பை சந்தித்து கலந்துரையாடுவதற்கு ஆஸ்திரேலிய பிரதமர் திட்டமிட்டிருந்தார். எனினும், மத்திய கிழக்கு போர் விவகாரத்தா
ல் மாநாட்டில் இருந்து ட்ரம்ப் முன்கூட்டியே வெளியேறியதால் சந்திப்பு நடக்கவில்லை.
நெதர்லாந்தில் நேட்டோ அமைப்பின் உச்சி மாநாடு நடைபெறுகின்றது. இதில் அமெரிக்க ஜனாதிபதியும் பங்கேற்றுள்ளார். இதில் பங்கேற்பதற்கு உத்தேசித்திருந்தாலும் பாதுகாப்பு அமைச்சரையே அல்பானீஸி அரசாங்கம் அனுப்பியுள்ளார்.
எனவே, அடுத்த மாதமளவில் அல்பானீஸி, வாஷிங்டன் செல்வார் என தெரியவருகின்றது.