தரவு மற்றும் தகவல் மீறல் இடம்பெறும் நாடுகளின் பட்டியலில் ஆஸ்திரேலியாவும் இடம்பெற்றுள்ளது.
கடந்துள்ள ஆறு மாதங்களில் மாத்திரம் 527 தரவுமீறல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்று ஆஸ்திரேலிய தகவ் ஆணையாளரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்தகாலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இது 9 சதவீத அதிகரிப்பாகும். கடந்த மூன்றாண்டு காலப்பகுதியும் இம்முறையே அதிகளவான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
சுகாதாரம் உள்ளிட்ட பொதுத்துறைகளிலும், தனியார் துறைகளிலும் அண்மைக்காலமாக தரவு மற்றும் தகவல் திருட்டு சம்பவங்கள் இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இணையவழி குற்றங்களைத் தடுப்பதற்கு காத்திரமான நடவடிக்கைகள் அவசியம் என்ற பரிந்துரையும் முன்வைக்கப்பட்டுள்ளது.