ஆஸ்திரேலிய சனத்தொகை 2024 மார்ச் காலாண்டில் 2.3 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதன்படி நாட்டின் சனத்தொகை 27.1 மில்லியனாக அதிகரித்துள்ளது என்று ஆஸ்திரேலிய புள்ளியியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்காலப்பகுதிகளில் ஆஸ்திரேலியாவில் 2 லட்சத்து 89 ஆயிரத்து 700 பேர் பிறந்துள்ளன. ஒரு லட்சத்து 84 ஆயிரத்து 200 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேற்கு ஆஸ்திரேலியாவிலேயே சனத்தொகை வேகமாக வளர்ச்சியடைந்துவருகின்றது. அங்கு சனத்தொகை வளர்ச்சி 3.1 வீPதமாக உள்ளது. 2ஆவது இடத்தில் விக்டோரியாவும், மூன்றாவது இடத்தில் குயின்ஸ்லாந்தும் உள்ளன.
டாஸ்மேனியாவில் சனத்தொகை வளர்ச்சி குறைந்த மட்டத்தில் உள்ளது.