அகதிகள் விவகாரம் தொடர்பில் பிரிஸ்பேனில் இன்று நடைபெற்ற போராட்டத்துக்கு பொலிஸார் இடையூறு விளைவித்துள்ளனர்.
இதனால் 10 நிமிடங்களுக்குள் போராட்டத்தை முடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஆஸ்திரேலியாவில் உள்ள அகதிகளுக்கு நிரந்தர விசா வழங்குமாறு வலியுறுத்தியும், அகதிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை சுட்டிக்காட்டியும் ஆஸ்திரேலியாவின் பிரதான நகரங்களில் இன்று போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
அந்தவகையில் பிரிஸ்பேனிலும் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை முன்னெடுப்பதற்கு போராட்டக்காரர்கள் தயாரானவேளை, பொலிஸார் இடையூறு விளைவித்தனர்.
போராட அனுமதியில்லை என்ற தொனியிலும் எச்சரித்தனர். இதனால் 10 நிமிடங்களுக்குள் போராட்டக்காரர்கள் கலைக்கப்பட்டனர்.
இச்சம்பவம் தொடர்பில் மனித உரிமை ஆர்வளர்களும், அகதி செயற்பாட்டாளர்களும் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.