வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை 2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 5 சத வீதத்தினால் குறைந்துள்ளது என தரவுகள் தெரிவிக்கின்றன.
மத்திய வங்கியின் தரவுகளின்படி, இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 37 பேர் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக சென்றுள்ளனர்.
பொருளாதார நிலைமைகளில் முன்னேற்றம் மற்றும் உள்நாட்டு ஊதிய உயர்வு ஆகியவை வெளிநாட்டு தொழிலாளர் இடம்பெயர்வைக் குறைத்துள்ளது எனக் கூறப்படுகின்றது.
அதேவேளை, தொழிலாளர்களின் பணம் அனுப்புதல் செப்டம்பரில் 695.7 மில்லியன் டொலராக உயர்ந்தது, இது 2025 ஆம் ஆண்டில் இதுவரை மூன்றாவது மிக உயர்ந்த மாதாந்த வரவாகும் என்றும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இந்த எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு 25.2வீத அதிகரிப்பை பிரதிபலிக்கிறது.
ஒட்டுமொத்தமாக, 2025 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் பணம் அனுப்புதல்கள் ஆண்டுக்கு ஆண்டு 20வீதம் அதிகரித்து- 5.8 பில்லியன் டொலரைத் தாண்டியுள்ளது.