வடக்கு நியூ சவூத் வேல்ஸில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
Armidale அருகே உள்ள Barraba விலேயே இன்று அதிகாலை 3.01 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
3.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கமே பதிவாகியுள்ளது எனவும், 10 கிலோ மீற்றல் ஆழத்திலேயே பதிவாகியுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிலநடுக்கத்தால் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. ஆஸ்திரேலியாவில் வருடமொன்றுக்கு 3.2 ரிக்டர் அளவை விடவும் குறைந்தளவான சுமார் 100 நிலநடுக்கங்கள்வரை ஏற்படுகின்றன என்று தெரியவந்துள்ளது.