Northern territory இல் 80 சதவீதமான பூர்வக்குடி சிறார்கள் மற்றும் இளைஞர்கள் இனவாதத்தை எதிர்கொண்டுவருகின்றனர் என்று புதிய ஆய்வறிக்கையொன்றில் தெரியவந்துள்ளது.
Northern territory இன் சிறார் ஆணையாளரின் அறிக்கையிலேயே இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
8 முதல் 19 வயதுக்குட்பட்ட 284 பேரிடம் இது தொடர்பில் வினவப்பட்டுள்ளது. இதில் 31 சதவீதமானோர், தாம் பாடசாலை சூழலில் இனவெறியை எதிர்கொள்வதாக கூறியுள்ளனர்.
மேலும் 29 பேர் பொது அமைப்புகளின் இன பாகுபாட்டை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், சில சமூக ஊடகங்களும் இனவெறியின் ஒரு பகுதியாக மாறியுள்ளது என கவலை வெளியிடப்பட்டுள்ளது.
இனவெறியை எதிர்த்துப் போராடுவதில் சிறந்த கல்வி மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முன்முயற்சிகள் முக்கியமானவை என்று அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
“ குழந்தைகள் மற்றும் இளைஞர்களைப் பற்றிய எதிர்மறையான, அச்சுறுத்தும் மற்றும் பாரபட்சமான சமூகக் கதைகள்" மாற்றப்பட வேண்டும் என்றும குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் குரல்களைக் கேட்கும் முறையான சீர்திருத்தம் அவசரமாகத் தேவை எனவும் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை இனவாதத்திற்கு தீர்வு காணும் பொறுப்பை இளைஞர்கள் தாங்களாகவே சுமக்கக் கூடாது எனவும், இனவாதத்தைத் தடுக்கும் கடமை அனைவருக்கும் உள்ளது எனவும் சிறார்கள் தொடர்பான ஆணைக்குழுவின் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.