Northern Territory இல் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். குடும்ப வன்முறை காரணமாக இக்கொலை இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
22 வயதுடைய பெண்ணொருவரே கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்துடன் தொடர்புடைய 36 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள நபர், கொலை செய்யபபட்ட பெண்ணின் துணையென தெரிவிக்கப்படுகின்றது.
Northern Territory இல் கடந்த வருடம் குடும்ப வன்முறையால் மூன்று பெண்கள் கொலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Northern Territory இல் 2000 ஆம் ஆண்டு முதல் இற்றைவரை 81 பெண்கள், அவர்களின் வாழ்க்கை துணையால் கொல்லப்பட்டுள்ளனர் எனவும், இவர்களில் 76 பேர் பூர்வக்குடி பெண்கள் எனவும் தரவுகள் தெரிவிக்கின்றன.
ஆஸ்திரேலியாவில் ஏனைய பகுதிகளைவிட Northern Territory இல் கொலை விகிதம் ஏழு மடங்கு அதிகம் என்பது கவலைக்குரிய விடயமாகும்.