வெனிசுலாவில் புதிய அரசு அமையும் வரை அமெரிக்காவே அந்த நாட்டை நிர்வகிக்கும் என்று ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் பயங்கரவாதத்தை எதிர்ப்பதாகக் கூறி, வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.
மேலும், வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை சிறைப்பிடித்து, அவர்களை அமெரிக்கப் படைகள் நாடு கடத்தியது.
மதுரோவை சிறைபிடிக்கும் காட்சியை ஜனாதிபதி டிரம்ப் நேரலையில் பார்த்ததாக அவர் கூறினார்.
இந்த நிலையில், வெனிசுலா மீதான தாக்குதல் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விளக்கம் அளித்துள்ளார்.
“ வெனிசுலாவில் புதிய அரசு அமையும் வரை வெனிசுலா அரசு நிர்வாகத்தை அமெரிக்காவே கவனிக்கும்.
வெனிசுலாவில் எண்ணெய் வர்த்தகம் சீரழிந்து விட்டது என்பது அனைவருக்கும் தெரியும்.
அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு வெனிசுலாவில் கதவுகள் திறக்கப்படுகின்றன. அங்கு எண்ணெய் உற்பத்தி கட்டமைப்பை மேம்படுத்துவோம். இதன்மூலம், வருமானத்தை பெருக்கி, நாட்டை வளமாக்குவோம்.” எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
நிக்கோலஸ் மதுரோ குற்றம் செய்ததற்கான ஆதாரங்கள் அமெரிக்க நீதிமன்றத்தில் உள்ளன. அமெரிக்க ராணுவத்தின் முதல் ஆப்பரேஷன் வெற்றியடைந்து விட்டது.
தேவைப்பட்டால், மற்றொரு மிகப்பெரிய தாக்குதலையும் நடத்துவோம். இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு மக்கள் பார்த்திடாத தாக்குதலை இன்று பார்த்துள்ளனர். சர்வாதிகாரி மதுரோவை நீதிக்குட்படுத்துவதே இதன் நோக்கம் என ட்ரம்ப் மேலும் கூறினார்.