இஸ்ரேல்மீது ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்திய நாளில் ஆஸ்திரேலியாவில் எவரும் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்களில் ஈடுபடக்கூடாது என்று பிரதமர் Anthony Albanese எச்சரிக்கை விடுத்துள்ளார்.
2023 ஒக்டோபர் 07 ஆம் திகதி ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேல்மீது தாக்குதல் நடத்தியது. இதில் ஆயிரத்துக்கு மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடியாக ஹமாஸ்மீது இஸ்ரேல் போர் தொடுத்துவருகின்றது.
இப்போரில் பாலஸ்தீனத்தில் குழந்தைகள், பெண்கள் உட்பட 41 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
இஸ்ரேல்மீது ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதல் நடத்தி எதிர்வரும் 07 ஆம் திகதியுடன் ஓராண்டாகின்றது.
அன்றைய தினம் ஆஸ்திரேலியாவில் போராட்டங்களை நடத்துவதற்குரிய ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன.
இந்நிலையிலேயே ஆதரவு போராட்டங்கள் வேண்டாம் என பிரதமர் எச்சரித்துள்ளார். அவ்வாறான முயற்சிகளையும் அவர் கண்டித்துள்ளார்.
இப்படியான பேரணிகள் பெரும் துயரத்துக்கே வழிவகுக்கும் எனவும் பிரதமர் Anthony Albanese சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை போராட்டங்களுக்கு அனுமதி வழங்கக்கூடாது என எதிர்க்கட்சி தலைவர் பீட்டர் டட்டனும் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், இதற்குரிய நடவடிக்கையில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
ஒக்டோபர் 07 ஆம் திகதி நடைபெறும் போராட்டங்களை தடுப்பதற்கு நியூ சவூத் வேல்ஸ் பொலிஸார் நீதிமன்றத்தை நாடியுள்ளார். இதற்கு மாநில பிரீமியரும் ஆதரவு தெரிவித்துள்ளார்.