சிட்னியிலுள்ள ஹோட்டல் அறையொன்றிலிருந்து கொக்கைன் போதைப்பொருள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை 3.10 மணியளவில் குறித்த ஹோட்டலுக்கு பொலிஸார் விரைந்தனர். சட்டவிரோத போதைப்பொருள் விற்பனை இடம்பெறுகின்றது என கிடைக்கப்பெற்ற தகவலையடுத்தே பொலிஸார் அங்கு விரைந்துள்ளனர்.
35 வயது நபர் தங்கியிருந்த ஹோட்டல் அறையை பொலிஸார் சோதனைக்குட்படுத்தினர் . இதன்போது 10 பைகளில் இருந்து கொக்கைன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அவற்றின் மதிப்பு 3 ஆயிரத்து 850 டொலர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட நபர் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.