தெற்கு குயின்ஸ்லாந்தில் நடந்த பயங்கர விபத்தில் 12 வயது சிறுமி உட்பட மூவர் பலியாகியுள்ளனர். மேலும் ஒரு சிறுமி படு காயமடைந்துள்ளார்.
தாபிங்காவில் உள்ள புன்யா நெடுங்;சாலையில் இரு நேற்றிரவு கார்கள் மோதுண்டதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தையடுத்து காரொன்று தீபிடித்து எரிந்தது.காரில் இருந்த சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மற்றைய காரில் இருந்த அதனை ஓட்டிவந்த 44 பெண் மற்றும் 12 வயது சிறுமியும் உயிரிழந்துள்ளனர். அக்காரில் இருந்த 13 வயது சிறுமி ஒருவர் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பில் பொலிஸ் விசாரணை இடம்பெறுகின்றது.