ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிலிப்பா பிராண்ட் தனது பதவியை இராஜினாமா செய்வதற்கு திட்டமிட்டுள்ளார்.
இதற்கமைய இவ்வாரம் அதிகாரப்பூர்வமாக அவர் பதவியில் இருந்து விலகுவார் என தெரியவருகின்றது.
ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த மிக மோசமான பயங்கரவாதத் தாக்குதலாக போண்டி தாக்குதல் கருதப்படுகின்றது.
இது தொடர்பில் அரசாங்கம்மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவரும் நிலையிலேயே பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் பதவி துறப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வெளியுறவுக் கொள்கை மற்றும் தேசிய பாதுகாப்பில் பிராண்ட் நீண்ட காலம் பணியாற்றியுள்ளார், மேலும் ஆஸ்திரேலியா ஆசியா எண்டெவர் விருதைப் பெற்ற முதல் நபராகவும் திகழ்கின்றார்.
போண்டி பயங்கரவாதத் தாக்குதலுக்கும், இவரது பதவி விலகலுக்கும் தொடர்பில்லை என்று லேபர் கட்சி தெரிவித்துள்ளது.