பிரிஸ்பேனின் தெற்குப் பகுதியில் ஏற்பட்ட கார் விபத்தில் மூவர் பலியாகியுள்ளனர்.
லோகன் - யரபில்பா பகுதியில் உள்ள Waterford Tamborine வீதியில் சனிக்கிழமை மாலை சுமார் 4.30 மணியளவில் இரு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டதாக அவசர சேவைகளுக்கு தகவல் கிடைத்தது.
ஒரு யூட் (ute) வாகனம் மற்றும் ஒரு ஸ்டேஷன் வேகன் மோதியதில், இரண்டு வாகனங்களும் கவிழ்ந்துள்ளன,
யூட் வாகனம் தீப்பிடித்து எரிந்துள்ளது.
இரு கார்களினதும் சாரதிகள் மற்றும் பெண்ணொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
ஸ்டேஷன் வேகனில் பயணித்த மேலும் மூன்று பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.