Northern Territory (NT) கிரீன்ஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கேட் மெக்னமாரா Kat McNamara , உடல்நலக் காரணங்களை முன்வைத்து உடனடியாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
2024-ஆம் ஆண்டு Nightcliff தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், Northern Territory சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கிரீன்ஸ் கட்சி உறுப்பினராக இருந்தார்.
அவரின் ராஜினாமாவால், Nightcliff தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது.
18 மாதங்களுக்கு முன் தேர்ந்தெடுக்கப்பட்ட Kat McNamara, தொடர்ச்சியான உடல்நல சவால்கள் காரணமாக இந்த கடினமான முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
தொகுதி மக்களுக்கு முழு அர்ப்பணிப்புடன் சேவை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அந்த பொறுப்பை இன்னொருவர் சிறப்பாக நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக விலகுவதாகவும் கூறினார்.
அவர் பதவியில் இருந்த காலத்தில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நிர்வாக நேர்மை, சூதாட்ட சீர்திருத்தம் உள்ளிட்ட பல முன்னேற்றமான விடயங்களுக்கு குரல் கொடுத்தார்.
Nightcliff தொகுதி, 24 ஆண்டுகள் தொழிலாளர் கட்சியிடம் இருந்த நிலையில், 2024-ல் மெக்னமாரா அதை கிரீன்ஸ் கட்சிக்காக கைப்பற்றினார்.
இந்த இடைத்தேர்தல், 2024 தேர்தல் தோல்விக்குப் பிறகு தொழிலாளர் கட்சி எதிர்க்கட்சித் தலைவர் செலீனா யூபோவுக்கு முதல் பெரிய அரசியல் சோதனையாக அமையும்.