இலங்கைக்கு 2026 ஜனவரி 01 முதல் பெப்ரவரி 22 வரையான காலப்பகுதிக்குள் 5 லட்சத்து 5 ஆயிரத்து 751 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை விடுத்துள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி காலப்பகுதிக்குள் இந்தியாவில் இருந்து 89 ஆயிரத்து 277 பேரும், பிரிட்டனில் இருந்து 55 ஆயிரத்து 407 பேரும், ரஷ்யாவில் இருந்து 45 ஆயிரத்து 351 பேரும் இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளனர்.
ஜேர்மனியில் இருந்து 35 ஆயிரத்து 413 பேரும், சீனாவில் இருந்து 231 ஆயிரத்து 621 பேரும், பிரான்ஸில் இருந்து 27 ஆயிரத்து 874 பேரும் மேற்படி காலப்பகுதிக்குள் இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளனர்.
மேலும் ஆஸ்திரேலியாவில் இருந்து 19 ஆயிரத்து 413 பேரும், கனடாவில் இருந்து 9 ஆயிரத்து 262பேரும் வருகை தந்துள்ளனர்.
இலங்கையின் பொருளாதாரத்துக்கு சுற்றுலாத்துறை பெரும் பங்களிப்பு வழங்கிவருகின்றது.
கடந்த வருடம் 23 லட்சத்து 62 ஆயிரத்து 521 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.