அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இறக்குமதி பொருட்கள் மீது புதிய வரியை அறிவித்துள்ள நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு தொடர்ந்து 10 சதவீத வரியே அமுலில் இருக்கும் என தெரியவருகின்றது.
சர்வதேச அளவில் இந்த வரி 15 சதவீதமாக உயர்த்தப்பட்டாலும், ஆஸ்திரேலியாவிற்கான பழைய விகிதமே தொடரும் என அமெரிக்க வர்த்தக அமைச்சர் டான் பாரெல் உறுதிப்படுத்தியுள்ளார்.
முன்னதாக விதிக்கப்பட்ட வரிகள் சட்டவிரோதம் என நீதிமன்றம் தீர்ப்பளித்த போதிலும், மாற்றுச் சட்டங்களைப் பயன்படுத்தி மீண்டும் வரிகளை அமுல்படுத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
தற்போதைய சூழலில் ஆஸ்திரேலியா தப்பித்திருந்தாலும், எதிர்காலத்தில் இந்த வரி மேலும் அதிகரிக்கப்படலாம் என்ற அச்சம் இன்னும் நிலவுகிறது.
இந்த வர்த்தகக் கொள்கையானது அமெரிக்காவில் விலை உயர்வை ஏற்படுத்தும் என்று வாதிடும் ஆஸ்திரேலியா, வரிகளை முழுமையாக நீக்க தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதிகள் தரப்பிலும் நாடுகளுடனான வர்த்தக உறவுகளின் அடிப்படையில் இந்த விகிதங்களில் மாற்றங்கள் இருக்கலாம் என்பது சூசகமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.