ஆஸ்திரேலியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையிலான இரு தரப்பு உறவை ஒரு திருமண வாழ்க்கையுடன் ஒப்பிட்ட சீன தூதுவர், பொதுவெளியில் விமர்சனங்களைத் தவிர்ப்பது உறவின் நிலைத்தன்மைக்கு அவசியம் என்று சுட்டிக்காட்டினார்.
ஆஸ்திரேலியாவுக்கான சீனத் தூதர் சியாவ் சியான் , கோவிட்-19 காலத்திற்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார வர்த்தகம் மீண்டும் சீராகியுள்ள நிலையில், பரஸ்பர மரியாதையுடன் செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.
மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் குறித்து கவலை வெளியிட்டுள்ள அவர், தைவான் விவகாரம் சீனாவின் உள்நாட்டு விவகாரம் என்பதில் உறுதியாக இருக்கிறார்.
ஆஸ்திரேலிய பாதுகாப்புப் படையினருடன் சமீபத்தில் ஏற்பட்ட இராணுவ உரசல் குறித்து விளக்கம் அளித்த அவர், சீனா தனது தேசிய நலன்களைப் பாதுகாக்க எப்போதும் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டார்.