ஈரான் மீதான ராணுவ நடவடிக்கையில் அமெரிக்காவுக்கு ஆஸ்திரேலியா போதுமான ஒத்துழைப்பு வழங்கவில்லை என டொனால்ட் டிரம்ப் முன்வைத்த விமர்சனத்திற்கு ஆஸ்திரேலியப் பிரதமர் பதிலடி கொடுத்துள்ளார்.
அமெரிக்காவின் எந்தவொரு கோரிக்கையையும் தமது நாடு நிராகரிக்கவில்லை என்று அல்பானீஸ் தெளிவுபடுத்தியுள்ளார்.
ஈரான்மீதான ராணுவ நடவடிக்கை தொடர்பில் அமெரிக்கா தங்களிடம் முன்னரே ஆலோசனை நடத்தவில்லை என்பதையும் ஆஸ்திரேலிய பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே தான் ஏன் அவ்வாறு குறிப்பிட்டார் என்பதை ட்ரம்ப்தான் தெளிவுபடுத்த வேண்டும் என பிரதமர் அந்தோனி அல்பானீஸி மேலும் குறிப்பிட்டார்