பெர்த்தின் தென்கிழக்கு பகுதியில் உள்ள லின்வுட் என்னுமிடத்தில் இன்று (28) அதிகாலை வாகனம் (Rideshare) மரத்தில் மோதி கோர விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ஏழு மாதக் குழந்தை சிகிச்சை பலனின்றி வைத்தியசாலையில் பரிதாபமாக உயிரிழந்தது.
வாகனத்தில் பயணித்த 32 வயதுப் பெண் மற்றும் மூன்று வயது சிறுவன் ஆகிய இருவரும் தீவிர காயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அல்லது சிசிடிவி காட்சிகள் வைத்திருப்பவர்கள் காவல்துறையினரைத் தொடர்பு கொள்ளுமாறு மேற்கு ஆஸ்திரேலிய காவல்துறை கோரிக்கை விடுத்துள்ளது.
இக்கோர விபத்து குறித்து அதிகாரிகள் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.