மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலகளாவிய எரிசக்தி நெருக்கடி குறித்து ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் நட்பு நாடுகளின் தலைவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுவருகின்றார்.
ஈரானின் ஏவுகணைத் திறனை அழித்தல் மற்றும் அணு ஆயுதப் பயன்பாட்டைத் தடுத்தல் ஆகிய அமெரிக்காவின் இலக்குகள் எட்டப்பட்டாலும், ஆட்சி மாற்றம் என்பதில் பெரும் சிக்கல் நிலவுகின்றது என பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“ வரலாற்றின் அடிப்படையில் ஒரு நாட்டின் ஆட்சியை மாற்றுவது என்பது மிகவும் கடினமான காரியம்.” எனவும் அந்தோணி அல்பானீஸ் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சரும் தனது பங்கிற்கு சர்வதேச நாடுகளுடன் தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துவருகின்றார்.