லேபர் கட்சியிலிருந்து வெளியேறி நான்கு மாதங்களுக்கு பிறகு புதியதொரு அரசியல் கட்சியை சுயாதீன செனட்டர் பாத்திமா பேமன் ஆரம்பித்துள்ளார்.
புதிய கட்சிக்கு 'Australia's Voice' என பெயரிடப்பட்டுள்ளது.
அனைத்து மாநிலங்களிலும் செனட் வேட்பாளர்கள் இக்கட்சி ஊடாக களமிறக்கப்படவுள்ளனர். கீழ் சபைத் தேர்தலிலும் ஒரு சில தொகுதிகளில் வேட்பாளர்கள் நிறுத்தப்படவுள்ளனர்.
இரு பிரதான கட்சிகள்மீது அதிருப்தியில் இருப்பவர்களுக்கும், உண்மையான மாற்றத்துக்காக போராடுபவர்களுக்கும் ஒரு குரலாக புதிய கட்சி விளங்கும் என்று செனட்டர் பாத்திமா பேமன் கூறியுள்ளார்.
அத்துடன், கட்சிக்கு பெயர் வைப்பது தொடர்பில் பூர்வக்குடி மக்களிடமும் தான் ஆலோசனை நடத்தியதாகவும் செனட்டர் குறிப்பிட்டுள்ளார்.