தமக்கு நிரந்தர விசா வழங்குமாறு வலியுறுத்தி மெல்பேர்ணில் உள்துறை அமைச்சு வளாகத்தில் இடம்பெற்றுவரும் அகதிகளின் போராட்டத்துக்கு இன்று இடையூறு விளைவிக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டத்தை முடக்கும் நோக்கில் மெல்பேர்ண் நகரசபை அதிகாரிகளும், பொலிஸாரும் இணைந்து அகதிகளின் உடமைகளை அள்ளிச்சென்றுள்ளனர்.
அதிகாரிகள் மற்றும் பொலிஸாரின் இச்செயலை வன்மையாகக் கண்டித்துள்ள போராட்ட ஒருங்கிணைப்பாளர் அரண் மயில்வாகனம், எத்தடை வரினும் போராட்டம் தொடரும் எனவும் அறிவித்துள்ளார்.
விசா இன்றி 12 வருடங்களுக்கு மேலாக ஆஸ்திரேலியாவில் பரிதவித்துவரும் அகதிகள் இணைந்தே 87 ஆவது நாளாக இப்போராட்டத்தை முன்னெடுத்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, இதற்கு முன்னரும் இனந்தெரியாத நபர்கள் சிலரால் போராட்டத்துக்கு இடையூறு விளைவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியாவில் வாழும் அகதிகள் விசா கிடைக்காததால் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். கடந்த சில மாதங்களுக்குள் மாத்திரம் நான்கு ஈழ அகதிகள் உயிரிழந்துள்ளனர் என்பது அறிந்ததே.