சிட்னியில் லேபர் கட்சி எம்.பியின் கணவரின் வாகனத்தை கொள்ளையடித்துச்சென்ற நபர்கள்மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் படுகாயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார்.
ஒக்டோபர் 04 ஆம் திகதியே காரை இவ்வாறு கடத்திச்சென்ற இருவர்மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
26 மற்றும் 34 வயதுகளுடைய இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இவர்களில் படுகாயம் அடைந்திருந்த 26 வயது நபரே சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.
மற்றையவர் நிலையான நிலையில் இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
லேபர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் Karen McKeown இன் காரே இவ்வாறு களவாடப்பட்டுள்ளது.