தெற்கு லெபனானில் உள்ள நகுராவில் உள்ள UNIFIL இன் பிரதான தளத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இரண்டு ஐ.நா அமைதி காக்கும் படையினர் காயமடைந்ததாக இஸ்ரேல் இராணுவம் வெள்ளிக்கிழமை கூறியது.
இந்த தாக்குதல் வேண்டுமென்றே ஐ.நா. அமைதி காக்கும் படையினரை குறி வைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில் ஐரோப்பிய தலைவர்கள் இஸ்ரேல் ராணுவம் மீது தங்கள் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.
ஒரு கூட்டறிக்கையில், பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஸ்பெயின் தலைவர்கள் இஸ்ரேலின் நடவடிக்கைகள் "நியாயமற்றது" என்றும் தாக்குதல்கள் "உடனடியாக முடிவுக்கு வர வேண்டும்" என்று கூறினர்.
"இந்த தாக்குதல்கள் யுஎன்எஸ்சிஆர் (ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம்) 1701 மற்றும் மனிதாபிமான சர்வதேச சட்டத்தின் கீழ் இஸ்ரேலின் கடமைகளை கடுமையாக மீறுவதாகும்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் தாக்குதல் பரவலாகக் கண்டனம் செய்யப்பட்டுள்ளது, லெபனானில் உள்ள ஐ.நா அமைதிப்படை மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதை நிறுத்துமாறு இஸ்ரேலை "முற்றிலும்" கோருவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் உறுதிப்படுத்தினார்.
உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமையன்று இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் இரண்டு லெபனான் வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் மேலும் மூவர் காயமடைந்ததாகவும் லெபனானின் இராணுவத்தின் குற்றச்சாட்டுகளை விசாரித்து வருவதாக இஸ்ரேல் இராணுவம் வெளிப்படுத்தியுள்ள நிலையில் இது வந்துள்ளது.
சபா.தயாபரன்.