அமெரிக்காவில் நடைபெறவுள்ள 2026 உலகக்கோப்பை கால்பந்து போட்டியில், வரலாற்றில் முதன்முறையாக இலங்கைத் தமிழர் ஒருவர் ஆஸ்திரேலிய அணிக்காக களமிறங்குகின்றார்.
உலகக்கிண்ண தொடரில் விளையாடுவதற்காக நிஷான் வேலுப்பிள்ளை Nishan velupillay ஆஸ்திரேலியா அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளமை
தமிழர்களுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.
விளையாட்டுத் துறையில் தமிழர்களின் உலகளாவிய வளர்ச்சியை இது அடையாளப்படுத்துகிறது.
மிகப்பெரிய சர்வதேச மேடையான FIFA தொடரில் பங்கேற்கும் இந்த வீரர், இளம் தலைமுறைக்கு ஒரு சிறந்த ஊக்கசக்தியாக விளங்குகிறார்.
கோடிக்கணக்கான மக்களின் கனவுகளைச் சுமந்து களம் காணும் இவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
இந்த வரலாற்றுச் சாதனை உலக அரங்கில் தமிழ் சமூகத்தின் அடையாளத்தை மேலும் வலுப்படுத்துவதாக அமையட்டும்.