அமேசான் Amazon நிறுவனம் ஆஸ்திரேலியாவில் விற்பனை செய்த குழந்தைகளுக்கான பைகளில் உரிய பாதுகாப்பு எச்சரிக்கை லேபிள்கள் இல்லாததால், நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு அந்நிறுவனத்தின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த பைகளில் உள்ள பொத்தான் மின்கலங்கள் (button batteries) குழந்தைகளுக்குப் பெரிய ஆபத்தை விளைவிக்கக்கூடும் என்பதால், அமேசான் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் உள்ள அமேசான் இருப்புகளில் வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான பைகளில் இந்த குறைபாடுகள் கண்டறியப்பட்டன.
சிறுவர்கள் தற்செயலாக இந்த மின்கலங்களை விழுங்கினால் உயிர்ப்பலி அல்லது கடுமையான காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.
இணையவழி வர்த்தக நிறுவனத்திற்கு எதிராக இத்தகைய பாதுகாப்பு விதிமீறல் தொடர்பாகத் தொடரப்பட்டுள்ள முதல் கூட்டாட்சி நீதிமன்ற வழக்கு இதுவாகும்.
தவறு செய்ததற்காக அமேசான் நிறுவனத்திற்கு அபராதம் மற்றும் பிற தண்டனைகளை விதிக்க ஒழுங்குமுறை ஆணையம் கோரியுள்ளது.