ஆஸ்திரேலியாவின் Nothern Territory அரசாங்கம் பொது இடங்களில் சட்டவிரோதமாக மது அருந்துபவர்களை கைது செய்வதற்கும் கடுமையான அபராதம் விதிக்கவும் காவல்துறை அனுமதிக்கும் புதிய சட்டத்தை கொண்டு வர உள்ளது.
முதலமைச்சர் லியா ஃபினோச்சியாரோ, குழப்பத்தை ஏற்படுத்தும் பொது இட குடிப்பழக்கத்தில் முன்கூட்டியே தலையிட காவல்துறையை இது அனுமதிக்கும் என்று கூறுகிறார், ஆனால் சுகாதார நிபுணர்களும் எதிர்க்கட்சிகளும் மது தொடர்பான தீங்கைக் குறைக்க இது சரியான நடைமுறை இல்லை என்று கூறுகிறார்கள்.
ஆஸ்திரேலியாவின் வடக்குப் பிராந்திய மாநிலத்தில் அடுத்த வாரம் இயற்றப்படும் சட்டத்தின் கீழ் பொது இடங்களில் மது அருந்துபவர்கள், 925 டொலர்கள் அபராதம் விதிக்கப்படலாம்.
செவ்வாய்கிழமை பாராளுமன்றம் கூடும் போது NT அரசாங்கம் புதிய பொது இடங்களில் மது அருந்துபவர்களுக்கு இந்த புதிய சட்டம் அறிமுகப்படுத்தும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
குடும்ப வன்முறை , நிலுவையில் உள்ள கைதுகள் மற்றும் ஜாமீன் மீறல்களுக்கான தேடல்களும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நடத்தப்படும் என்று முதல்வர் லியா பினோச்சியாரோ கூறினார், குற்றங்கள் நடப்பதற்கு முன்பே அதைத் தடுப்பதில் பொதுக் குடிப்பழக்கம் மிகவும் முக்கியமான பகுதியாகும் என்று அவர் கூறினார்.
ஆனால் இந்த புதிய சட்டங்கள் இனவெறியை அதிகரிக்கக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இது உண்மையில் தாக்குதல்கள் அல்லது சொத்துக் குற்றங்கள் போன்ற பிராந்தியவாசிகள் கவலைப்படுவதாகச் சொல்லும் விஷயங்கள் குறைய வாய்ப்பில்லை என்று சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.
சபா.தயாபரன்.