நிழல் உலக தாதா மிக் கட்டோ Mick Gatto, விக்டோரியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இக் கைது இடம்பெற்றுள்ளது.
கட்டுமானத் துறையில் நிலவும் குற்றச் செயல்களைக் கண்காணிக்கும் Taskforce Hawk குழுவினர், மவுண்ட் மார்த்தா பகுதியில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.
தன்னை ஒரு மத்தியஸ்தராக அடையாளப்படுத்திக் கொள்ளும் Mick Gatto , கட்டுமான நிறுவனங்களிடம் மிரட்டி பணம் பறிப்பதாக நீண்டகாலமாக குற்றச்சாட்டுகள் நிலவி வருகின்றன.
குறிப்பாக, கட்டுமானப் பணிகளில் இடையூறு ஏற்படாமல் இருக்க அவர் பல மில்லியன் டாலர்களைப் பெற்றதாகக் கூறப்படுகிறது.
சட்டத்திற்குப் புறம்பான கும்பல்களுடன் தனக்குத் தொடர்பு இல்லை என அவர் மறுத்தாலும், தற்போது தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் ஆஸ்திரேலிய கட்டுமானத் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.