சொல்லிசை பாடகர் சங்கீதன் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து சனிக்கிழமை (06) கிளிநொச்சி மாவட்ட பழைய கச்சேரிக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
தமிழ் மக்களின் அவலங்களையும், தியாகங்களையும், வீரத்தையும், வாழ்வியலையும் தனது சொல்லிசை மூலம் பாடலாக பாடி வந்த இஞைளன் சாவகச்சேரி பொலிஸாரால் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டமை ஒட்டுமொத்த தமிழ் படைப்பாளிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் கிளிநொச்சியில் குறித்த இச் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது, விடுதலை செய்ய விடுதலை செய் சங்கீதனை விடுதலை செய், சட்டத்தின் ஆட்சி சமமாக இருக்கட்டும், சட்டத்தை அடக்குமுறை கருவியாகப் பயன்படுத்தாதே போன்ற கோசங்களை எழுப்பியதோடு பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.
இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலைஞர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், மத தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் பொது மக்கள் என பலர் கலந்துகொண்டனர்.