ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் Tony Burke, One Nation கட்சியின் தலைவர் Pauline Hanson கடுமையாகச் சாடியுள்ளார்.
அடுத்த தேர்தலில் தனது கட்சி இலக்கு வைக்கவிருக்கும் தற்போதுள்ள Labor கட்சி வசம் உள்ள தொகுதிகளின் பட்டியலை Hanson பகிர்ந்ததைத் தொடர்ந்து Tony Burke விமர்சனக் கணை தொடுத்துள்ளார்.
இந்தப் பட்டியலில் மேற்கு சிட்னியில் உள்ளBurkeகின் Watson தொகுதியும் அடங்கும்.
"அவர் எனது சிட்னி பகுதியை வெறுக்கிறார், அதை அவரே சொல்லியும் இருக்கிறார். இந்த இடத்தில் நான் ஒன்றை தெளிவாகப் பதிவு செய்ய விரும்புகிறேன்: நவீன ஆஸ்திரேலியாவை வெறுப்பவர்கள் தங்களை தேசபக்தர்கள் என்று பொய் வேடமிடக் கூடாது," என்று Tony Burke கூறினார்.
மேலும், "ஆஸ்திரேலியா நாம் எப்போதும் இல்லாத ஒரு போலி உருவகத்திற்காக அல்லாமல், இன்று நாம் யாராக இருக்கிறோமோ அதற்காகவே நான் இந்நாட்டை நேசிக்கிறேன்" என்றும் அவர் குறிப்பிட்டார்.
"One Nation கட்சி எப்போதும் எனது சிட்னி பகுதியில் போட்டியிடுகிறது, அவர்கள் மீண்டும் போட்டியிடுவார்கள். இது ஒரு ஜனநாயகம், யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். ஆனால், சக ஆஸ்திரேலியர்களை இழிவுபடுத்த நினைப்பவர்களுக்கு நான் சொல்லும் செய்தி என்னவென்றால், நாம் அதைவிட மிகச் சிறந்த ஒரு நாடு," என்றார் பர்க்.
தொழிலாளர் கட்சியின் முன்னணி அமைச்சர்களான டோனி பர்க், கிறிஸ் போவன் , கிளாரி ஓ'நீல் மற்றும் மேடலின் கிங் ஆகியோரின் தொகுதிகளை இலக்கு வைக்க ஒன் நேஷன் கட்சி திட்டமிட்டுள்ளதாக புதன்கிழமை அன்று ஹான்சன் ஒரு hit list பகிர்ந்திருந்தார்.
அதற்குப் பதிலடியாகவே பர்க்கின் இந்த கடுமையான விமர்சனம் வந்துள்ளது.
பர்க்கின் வாட்சன் தொகுதி ஆஸ்திரேலியாவிலேயே அதிக பல்லின கலாச்சாரம் கொண்ட தொகுதிகளில் ஒன்றாகும். இதில் பெல்மோர் (Belmore), கிரீனாக்ரே (Greenacre) மற்றும் 61 சதவீதத்திற்கும் அதிகமான முஸ்லிம் மக்கள் தொகையைக் கொண்ட லகெம்பா (Lakemba) ஆகிய புறநகர்ப் பகுதிகள் அடங்கும்.