மெல்பேர்ண் தென்கிழக்கு பகுதியில் கார் மோதி மூன்று வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்து நேற்று இடம்பெற்றுள்ளது. படுகாயமடைந்த சிறுமி உடன் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் இன்று தெரிவித்தனர்.
தனது குடும்பத்தாருடன் பாதசாரி கடவையில் குறித்த சிறுமி பயணித்துக்கொண்டிருக்கையிலேயே அவர்மீது கார் மோதியுள்ளது.
24 வயது கார் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணைகளின் பின்னர் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஒக்டோபர் 23 ஆம் திகதி அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும்.
விபத்து தொடர்பில் மேலதிக பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.