ஆஸ்திரேலிய புள்ளியியல் அமைப்பின் (ABS) அண்மைக்கால தரவுகளின்படி, நிகர வெளிநாட்டு புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
2026 மார்ச் உடன் முடிவடைந்த 12 மாதங்களில் நிகர வெளிநாட்டு புலம்பெயர்வு 292,100 ஆக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் 309,500 ஆக இருந்தது.
நிகர வெளிநாட்டு புலம்பெயர்வு எண்ணிக்கை குறைந்தபோதிலும், ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை 392,700 அதிகரித்து, ஒட்டுமொத்த மக்கள் தொகை 2.79 கோடியை (27.9 மில்லியன்) எட்டியுள்ளது.
மாநில அளவிலான மக்கள் தொகை வளர்ச்சியில், மேற்கு ஆஸ்திரேலியா 2.1 சதவீத வளர்ச்சியுடன் முதலிடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து விக்டோரியா 1.6 சதவீத வளர்ச்சியைக் பதிவு செய்துள்ளது.
இக்காலகட்டத்தில் டாஸ்மேனியா மாநிலம் மிகக் குறைந்த அளவாக 0.6 சதவீத மக்கள் தொகை வளர்ச்சியை மட்டுமே கண்டுள்ளது.