பிரிஸ்பேனில் ஆம்புலன்ஸ் வண்டி விபத்துக்குள்ளானதில் நால்வர் காயமடைந்துள்ளனர்.
இன்று காலை 7.30 மணியளவில் பகுதியில் வைத்து ஆம்புலன்ஸ்மீது காரொன்று மோதியுள்ளது. இதனையடுத்து ஆம்புலன்ஸ் வண்டி, வீதியில் கவிழ்ந்தது.
ஆம்புலன்ஸில் இருந்த மூவரும், காரில் இருந்த ஒருவரும் காயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தின்போது ஆம்புலன்ஸில் நோயாளி எவரும் இருக்கவில்லை. விபத்து தொடர்பான விசாரணைகள் இடம்பெறுகின்றன.