உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவரும், மூத்த தமிழ் ஆர்வலருமான பழ. நெடுமாறன் அவர்களின் மகன் திரு. பழ. மாணிக்கம் (57) , ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நேற்று (01)காலை காலமானார்.
கடந்த பல ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் வசித்து வந்த பழ. மாணிக்கம் , பௌத்த மதத்தைத் தழுவி பௌத்தத் துறவியாக எளிய வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்.
கடந்த ஒரு மாத காலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது.
அன்னாரது இறுதிச் சடங்குகள் பௌத்த சமய முறைப்படி மெல்போர்ன் நகரிலேயே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பழ. நெடுமாறன் அவர்களின் கடவுச்சீட்டு இந்திய ஒன்றிய அரசால் முடக்கப்பட்டிருப்பதால், மகனின் இறுதிச் சடங்கில் பங்கேற்க அவராலும் அவரது துணைவியாராலும் ஆஸ்திரேலியா வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இது தமிழ் உணர்வாளர்கள் மற்றும் ஆதரவாளர்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
பழ. மாணிக்கம் மறைவிற்கு உலகெங்கிலும் உள்ள தமிழ் அமைப்புகளும், தலைவர்களும், தமிழ் ஆர்வலர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.