மெல்போர்னின் கிழக்குப் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் வெளியே தாய் மற்றும் அவரது ஐந்து வயது மகள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, காவல்துறை சந்தேகத்திற்கிடமான கொலை மற்றும் தற்கொலை கோணத்தில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்குச் பாக்ஸ் ஹில் (Box Hill) பகுதியில் உள்ள ஒரு வீதிக்கு அவசரப் பிரிவினர் அழைக்கப்பட்டுள்ளனர். அங்கு கட்டடத்தின் அடிப்பகுதியில் 38 வயதுப் பெண் மற்றும் சிறுமி ஆகிய இருவரின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டன.
பிளாக்பர்ன் சவுத் (Blackburn South) பகுதியைச் சேர்ந்த தாய் மற்றும் மகள் என நம்பப்படும் இருவரும், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்; அவர்களைக் காப்பாற்ற மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.
இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதி மக்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
"நாங்கள் மிகவும் சோகமடைந்துள்ளோம்; எங்களது குழுவினர் அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்கிறோம்" என்று உள்ளூர்வாசி ஒருவ தெரிவித்தார்.
மற்றொருவர் கூறுகையில், என்ன நடந்தது என்பதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றார். "மிகவும் அதிர்ச்சியாகவும் சோகமாகவும் இருக்கிறது. இது நடந்தது என்னால் நம்பவே முடியவில்லை."
இறப்புக்கான காரணங்கள் குறித்து துப்பறிவாளர்கள் விசாரணை நடத்தி வருவதுடன், இந்தச் சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு இல்லை என்பதையும் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.