சிட்னி மேற்கு பகுதியிலுள்ள வீடு மற்றும் காரொன்றுமீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் 3 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் இடம்பெற்று 15 நிமிடங்களுக்கு பிறகு அதே பகுதியில் மற்றுமொரு கார் எரிக்கப்பட்டுள்ளது.
காருக்கு தீ வைத்த பின்னர் அப்பகுதியில் இருந்து இருவர் ஓடுவதை பொலிஸார் கண்டுள்ளனர் எனக் கூறப்படுகின்றது.
மேற்படி சம்பவங்களில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. எனினும், சொத்து இழப்பு ஏற்பட்டுள்ளது. இவ்விரு சம்பவங்களுக்கும் தொடர்புள்ளதா, இது குழு மோதலா என்பது உள்ளிட்ட விரிவான விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டுவருகின்றனர்.