மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தின் தென்மேற்குப் பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு வயதுக் குழந்தை உயிரிழந்துள்ளது.
பேர்த் நகரிலிருந்து சுமார் 200 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள கோலி (Collie) பகுதியில் உள்ள வீடொன்றில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீயணைப்புப் படையினர் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பின்னர், வீட்டிலிருந்து குழந்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
தீ விபத்து ஏற்பட்டபோது வீட்டுக்குள் பலர் இருந்ததாகவும், அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேறியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இது தொடர்பான விசாரணைகளைத் தீவைப்பு விசாரணைப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.
எனினும், குழந்தையின் மரணத்தில் சந்தேகத்துக்கிடமான அம்சங்கள் எதுவும் இல்லை எனத் தெரிவித்துள்ள மேற்கு ஆஸ்திரேலிய பொலிஸார், சம்பவம் தொடர்பான அறிக்கை மரண விசாரணை அதிகாரியிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.