ஆஸ்திரேலியாவில் அகதிகளின் உரிமைகள், வீடற்ற மக்களின் பிரச்சினைகள், தொழிற்சங்கப் போராட்டங்கள் எனச் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகத் தனது வாழ்நாள் முழுவதும் குரல் கொடுத்து வந்த சமூகச் செயற்பாட்டாளர் சூரியன் நல்லையா காலமானார்.
1980களின் ஆரம்பத்தில் ஆஸ்திரேலியாவில் ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்டங்களுக்கு தொழிற்சங்கங்களின் ஆதரவைப் பெற்றுக்கொடுப்பதில் அவர் முக்கியப் பங்காற்றியுள்ளார்.
சமூக அநீதிகளுக்கு எதிராகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் இறுதிவரை உறுதியுடன் குரல் எழுப்பிய அவரது மறைவு, தமிழ் சமூகத்திற்கும் சமூக நீதிக்கான போராட்டங்களுக்கும் பேரிழப்பாகக் கருதப்படுகிறது.
அவரது சமூகப் பணிகளையும், உரிமைப் போராட்டங்களுக்கான பங்களிப்புகளையும் நினைவுகூர்வதுடன், அவர் முன்னெடுத்த சமூக மாற்றத்திற்கான பணிகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதே அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக அமையும் எனப் பலரும் குறிப்பிட்டுள்ளனர்.