ஆசிய – பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) மாநாட்டில், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் ஆகியோருடன் இணைந்து குடும்பப் புகைப்படத்தில் பங்கேற்றுள்ளார்.
உலகின் முக்கிய வல்லரசுத் தலைவர்கள் ஒன்றுகூடியுள்ள இந்த மாநாட்டில், அல்பானீஸ் இந்த தலைவர்களுடன் ஒரே புகைப்படத்தில் தோன்றியமை சர்வதேச அரசியல் கவனத்தை ஈர்த்துள்ளது.
அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ள இந்த மாநாடு, சர்வதேச வர்த்தகம், பாதுகாப்பு, அணுவாயுதக் கட்டுப்பாடு மற்றும் உலக அரசியல் உறவுகள் தொடர்பான முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இந்த மாநாட்டில் தலைவர்கள் நேரடியாக சந்தித்து கலந்துரையாடும் நிலையில், உலக நாடுகளுக்கிடையிலான உறவுகள் மற்றும் எதிர்கால ஒத்துழைப்புகள் தொடர்பில் பல்வேறு எதிர்பார்ப்புகள் நிலவுகின்றன.