சீனாவுடன் 2022ஆம் ஆண்டு கைச்சாத்திட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை இரத்துச் செய்துவிட்டு, ஆஸ்திரேலியாவுடன் புதிய விரிவான பாதுகாப்பு ஒப்பந்தமொன்றை மேற்கொள்ள பசிபிக் பிராந்திய நாடான தீவுகள் சாலமன் தீவுகள் திட்டமிட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
சாலமன் தீவுகளின் பிரதமர் மெத்தியூ வேல், சாலமன் தீவுகள் ஆஸ்திரேலியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில், இந்தத் தீர்மானம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவுடனான ஐந்தாண்டு கால பாதுகாப்பு ஒப்பந்தத்தை எதிர்வரும் ஏப்ரல் மாதம் காலாவதியாகும்போது புதுப்பிக்கப் போவதில்லை என சாலமன் தீவுகள் அரசாங்கம் ஏற்கனவே பீஜிங்கிற்கு அறிவித்துள்ளதாக, சிட்னி மோர்னிங் ஹெரால்ட் (The Sydney Morning Herald) செய்தி வெளியிட்டுள்ளது.
பெயர் குறிப்பிட விரும்பாத சாலமன் தீவுகளின் அதிகாரிகளை மேற்கோள்காட்டி இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானீஸை, சாலமன் தீவுகளின் பிரதமர் மெத்தியூ வேல் நாளை (25) சந்திக்கவுள்ளார். இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையில் புதிய விரிவான ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், பசுபிக் பிராந்தியத்தில் சாலமன் தீவுகளின் பிரதான பாதுகாப்புப் பங்காளியாக அவுஸ்திரேலியா மாறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆஸ்திரேலியாவின் வடகிழக்கில் சுமார் 1,600 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள சாலமன் தீவுகள், புவிசார் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த நாடாகக் கருதப்படுகின்றது.
சீனாவுடனான பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்தியமை, கடந்த மே மாதம் நடைபெற்ற தேர்தலிலும் முக்கிய பேசுபொருளாக அமைந்திருந்தது. இதனைத் தொடர்ந்து மெத்தியூ வேல் பிரதமராகப் பொறுப்பேற்றார்.
கடந்த ஜூலை மாதம், அவுஸ்திரேலியாவும் சாலமன் தீவுகளும் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு இணக்கம் தெரிவித்திருந்தன. அத்துடன், அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து பசுபிக் பிராந்தியத்தில் சீனா ஏவுகணைச் சோதனை நடத்தியமைக்கும் இரு நாடுகளும் கண்டனம் தெரிவித்திருந்தன.
இந்நிலையில், பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருவது தொடர்பில் அவுஸ்திரேலியாவும் அமெரிக்காவும் அண்மைக்காலமாகக் கவலை வெளியிட்டு வருகின்றன.
எனினும், பசுபிக் தீவு நாடுகளுடனான சீனாவின் ஒத்துழைப்பு பரஸ்பர மரியாதை மற்றும் சமத்துவத்தின் அடிப்படையிலானது என்றும், அது எந்தவொரு மூன்றாம் நாட்டையும் இலக்காகக் கொண்டதல்ல என்றும் சீன வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.