தமிழீழ தேசிய மாவீரர் நாளை முன்னிட்டு இன்று இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மாவீரர்களுக்கு சுடர் ஏற்றி உணர்வுபூர்வமாக வணக்கம் செலுத்தப்பட்டது.
மாவீரர் துயிலும் இல்லங்கள், மாவீரர் நினைவாலயங்கள், சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட நினைவிடங்களில் சுடர் ஏற்றும் நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இன்று மாலை 5 மணிக்கு முன்னரே துயிலும் இல்லங்கள், மாவீரர் நினைவாலயங்களை நோக்கி மக்கள் பெருமளவில் திரளத் தொடங்கினர்.
மாலை 6.05 மணிக்கு மணி ஒலி எழுப்பப்பட்டதை அடுத்து, 606 மணிக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டது.
அதையடுத்து. 6.07 மணிக்கு மாவீரர்கள் நினைவாக பொதுச் சுடர்கள் ஏற்றப்பட்டதை அடுத்து, மாவீரர்களின் பெற்றோர், உறவுகள், மற்றும் பொதுமக்களால் ஈகைச் சுடர்கள் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது.
தமிழர் தாயகத்தில் உள்ள துயிலும் இல்லங்களில் ஆயிரக்கணக்கில் மக்கள் அணிதிரண்டு எழுச்சியுடன் மாவீரர்களை நினைவுகூர்ந்தனர்.