காலநிலை மாற்றங்களால் ஆஸ்திரேலியர்கள் உள ரீதியிலான தாக்கங்களையும் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கடும் வெப்பம், காட்டுத் தீ, அடை மழை, கடல் மட்ட உயர்வு போன்ற இயற்கை சீற்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் அதிகரிக்கக்கூடிய அபாயம் காணப்படுகின்றது.
வானிலை ஆய்வு மையம் மற்றும் CSIRO குழுவால் வெளியிடப்பட்டுள்ள காலநிலை அறிக்கையிலேயே இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஈராண்டுகளுக்கு ஒரு முறை இவ்வறிக்கை வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன், புவி வெப்பமடைந்து வருவதால், நாட்டில் வெப்பம் அதிகரித்து, குளிர்காலம் குறையும் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
அதேவேளை காலநிலை மாற்ற சவால்களை எதிர்கொள்வதற்குரிய திட்டங்கள் வகுக்கப்பட்டுவருகின்றன என்று காலநிலை மாற்றம் தொடர்பான அமைச்சர் தெரிவித்துள்ளார்.