குயின்ஸ்லாந்து பிராந்திய நகருக்கு அருகே ஏற்பட்ட காட்டு தீ, கட்டுப்பாட்டை மீறி 18 மணி நேரத்துக்கு மேலாக எரிந்துவருகின்றது.
காட்டு தீயையடுத்து நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
தீ இன்னும் கட்டுக்குள் வராததால் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு தமது சொந்த இடங்களுக்கு திருப்ப முடியாமல் உள்ளது.
நேற்றிரவு 8 மணியளவிலேயே மக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இதுவரையில் சுமார் 1,700 எக்டேயர் எரிந்து நாசமாகியுள்ளது.