குயின்ஸ்லாந்தின் சன்ஷைன் கடற்கரையில் உடற்பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பெண்களின் அத்துமீறி நடத்துகொள்ள முற்பட்டார் எனக் கூறப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
20 வயது இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மூன்று பெண்களை இலக்கு வைத்தே இவர் சேட்டையில் ஈடுபட்டுள்ளார் எனவும், படங்களையும் எடுத்துள்ளார் எனவும் கூறப்படுகின்றது. அவர்மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 29 ஆம் திகதி அவர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.