ஆஸ்திரேலியாவில் செப்டம்பர் காலாண்டுக்கான சம்பள உயர்வானது மிகவும் குறைந்த சதவீதத்திலேயே அதிகரித்துள்ளது. எனினும், பணவீக்கத்தைவிட சம்பள உயர்வு சற்று அதிகரித்திருப்பது வாழ்க்கைச் செலவு அழுத்தங்களை சமாளிக்க சிறு நிவாரணமாக அமையும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
செப்டம்பர் காலாண்டுக்கான சம்பளம் 0.8 வீதத்தால் அதிகரித்துள்ளது என்று ஆஸ்திரேலிய புள்ளியியல் திணைக்கள தரவுகள் தெரிவிக்கின்றன.
அதேவேளை ஆஸ்திரேலியாவில் வருடாந்த ஊழிய வளர்ச்சி வீதம் 3.5 ஆக பதிவாகியுள்ளது. ஜுன் காலாண்டில் இந்த வீதம் 4 ஆக பதிவாக இருந்துள்ளது.