நியூ சவூத் வேல்ஸ் மாநில நாடாளுமன்றத்துக்கு அருகிலுள்ள சிட்னி புறநகர் பகுதியில் நபரொருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார் எனக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணை ஆரம்பமாகியுள்ளது.
மாநில நாடாளுமன்றத்துக்கு பின்னால், நபரொருவர் இன்று ஒரு பொம்மைத் துப்பாக்கியுடன் வெளியேறியுள்ளார் எனக் கூறப்படுகின்றது.
அந்நபர் பயன்படுத்திய துப்பாக்கி ஜெல் பிளாஸ்டராக இருக்கலாம் என்றும், அதன்மூலமே தரையை நோக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் அந்த நபர் அங்கிருந்து வெளியேறியுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.