இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கிடையிலான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கூட்டாண்மையை மேம்படுத்துவது தொடர்பான பேச்சு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இத்துறைக்கான இரு வழி முதலீடுகள் பற்றியும் ஆராயப்பட்டுள்ளது.
பிரேசிலில் நடைபெற்ற ஜி - 20 மாநாட்டில் இந்திய மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர்கள் பங்கேற்றிருந்தனர்.
இம்மாநாட்டுக்கு இணையாக இந்திய, ஆஸ்திரேலிய இரு நாட்டு உச்சி மாநாடும் நடைபெற்றது. இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான கல்வி, பொருளாதார, பாதுகாப்பு மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே நடைபெற்ற இரு நாடுகளுக்கிடையிலான உச்சி மாநாட்டின்போது எட்டப்பட்ட தீர்மானத்துக்கமைய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கூட்டாண்மை ஆரம்பிக்கப்பட்டதை இரு நாட்டு தலைவர்களும் வரவேற்றுள்ளனர்.